செய்திகள்

கனடிய திரையரங்குகளில் ‘ பொய்யாவிளக்கு’ கால அட்டவணை

ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை அவலங்களை எமது எதிர்காலச் சந்ததிக்கும் பிற தேச மக்களுக்கும் எடுத்துச் சொல்லும் ஒரு திரைப்ப்படம் பொய்யா விளக்கு. இது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாட்களில் மக்களோடு நின்று சேவையாற்றிய வைத்தியர்களில் ஒருவரான வைத்தியர் வரதராஜாவின் கதையினை எடுத்து வருகிறது.

போர்க்கால உண்மைச்சம்பவங்கள் சார்ந்த திரைப்படங்கள் சர்வதேச திரைதுறையில் அதிகம். யூதர்கள் தமக்கு நேர்ந்த இனப்படுகொலையை இன்றும் திரையில் சர்வதேச தரத்தில் கொடுக்கிறார்கள். பொய்யாவிளக்கு தமிழரின் அதே திசை நோக்கிய ஒரு படி. சிறிலங்காவின் ஈழ தமிழரின் மீதான போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை வரலாற்றை திரைக்கு உரியதாக நேர்த்தியான திரைக்கதை மூலம் முதலில் இருந்து இறுதிவரை பார்வையாளரை சிறு சத்தமே இல்லாமல் இருக்கையில் இருத்தும் திறன் கொண்ட படைப்பு இது என்று அண்மையில் இந்த படத்தை London நகரில் சிறப்பு காட்சியாக பார்த்தவர்கள் தெரிவித்திருந்தனர்.

ஈழ தமிழரின் ஒரு மறக்க முடியாத காலத்தினை எதிர்கால சந்ததிக்காக வைத்தியர் வரதராஜா மீண்டும் பழையன மீட்டு திரையில் வாழ்ந்துள்ளார். அதை மிக அழுத்தமாக இயக்குனர் தனேஷ் கொடுத்துள்ளார்.

Toronto நகரில் Woodside திரையரங்கில் பின்வரும் காட்சிகள் வரும் மாதங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

Upcoming shows at Woodside Cinema – Toronto
Saturday , March 21 @ 1:30 pm
Saturday, April 4 @ 1:30 pm
Saturday, May 2 @ 1:30 pm
Sunday, May 17 @ 1:30 pm
Saturday, May 30 @ 1:30 PM

Titckets $20. For students discounted ticket $10