செய்திகள்

கன்னியாஸ்திரி பாலியல் கலாத்காரம் தொடர்பாக 10 பேர் கைது

மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் 72 வயது கன்னியாஸ்திரியை கொள்ளைக் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக, இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 10 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக நாடியா மாவட்ட காவல் துறை அதிகாரி அர்னாப் கோஷ் கூறினார். மேலும், மாவட்டம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும் சிசிடிவி கேமராவில் பதிவான உருவங்களை அடிப்படையாக வைத்து கைது செய்யப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியும் நடந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலம் ரனகாட்டில் உள்ள ஜீசஸ் மற்றும் மேரி கான்வென்டுக்குள் 6 பேர் புகுந்து  கான்வென்ட்டில் இருந்த 72 வயது கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்து அங்கிருந்த ரூ. 9 லட்சம் பணத்துடன் தப்பியோடிய நிலையியேலே பொலிசார் இந்த தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த விவகாரம் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர் வாப்சி என்ற பெயரில் நடந்து வரும் மதம் தொடர்பான வெறிச் செயல் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

ரானாகாட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கன்னியாஸ்திரியின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

nun raped