செய்திகள்

கப்ரால் மற்றும் சஜின் வாஸ் குணவர்த்தனவின் கடவுச்சீட்டுக்கள் முடக்கம்

முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் கப்ரால் மற்றும் வெளிநாட்டமைச்சின் முன்னாள் ஒருங்கிணைப்பு செயலாளராக பணியாற்றிய சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோரின் கடவுச்சீட்டுக்களை முடக்குமாறு இலஞ்ச அணைக்குழு உத்தரவிட்டிருக்கிறது.

இவர்கள் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் நிறைவடையும் வரையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசருமான ஜகத் பாலபட்டபெந்தி குறிப்பிட்டார்.