செய்திகள்

கமரூனை சந்தித்தார் மைத்திரி

பிரித்தானியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திங்கட்கிழமை லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் அமைப்பு தின நிகழ்வுகளில் கலந்துகொண்டபின்னர் இன்றையதினம் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது , தேர்தல் காலத்தில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்றும் அதற்கு பிரித்தானியா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் கமரூன் தெரிவித்தார்.

இதேவளை, கமரூனை சந்தித்த பின்னர் தனது காரில் ஏறுவதற்கு மைத்திரிபால சிறிசேன வெளியே வந்தபோது அங்கு நின்றிருந்த சனல் 4 தொலைக்காட்சியின் செய்தியாளர் கலம் மக்ரே , நேர்காணல் ஒன்றுக்கு கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். அவருக்கு அதற்கு நேரம் இல்லை என்று அருகில் வந்த வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர பதிலளித்தார்.

 2