கமலுக்கு நான் நிகரானவன் இல்லை : விவேக்
நடிகர் கமல்ஹாசனுக்கு நான் சற்றும் நிகரானவன் இல்லை. அவருடன் நான் மோதுவதாக வரும் செய்திகள் வருத்தம் தருகின்றன என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.
வரும் 3 ம் தேதியில் கமல் நடித்த பாபநாசம் திரைப்படம் திரைக்கு வருகிறது, அதே திகதியில் நடிகர் விவேக்கின் பாலக்காட்டு மாதவன் படமும் ஒன்றாக வெளியாகிறது. இதனால் பாபநாசம் படத்திற்குப் போட்டியாக பாலக்காட்டு மாதவன் படத்தை விவேக் வெளியிடுகிறார் என்று பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அதேபோல பாபநாசம் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதியை அறிந்த பல திரைப்படங்கள் போட்டியில் இருந்து பின்வாங்கிய வேளையில், பாபநாசம் வந்தால் என்ன பாலக்காட்டு மாதவன் அதன் கதைக்காக வெற்றிபெறும் என்று படத்தின் தயாரிப்பளர் கூறியதாக வந்த செய்திகள் தொடர்ந்து பத்திரிக்கைகளில் பரபரப்பாக அடிபட்டு வந்தது.
போட்டியெல்லாம் இல்லை இந்நிலையில் நடிகர் விவேக் சமீபத்தில் ஒரு இதழுக்கு அளித்த பேட்டியில் இரு படங்களும் ஒன்றாக வெளிவருகின்றன, என்பது உண்மைதான் ஆனால் கமலுக்கு நான் ஒருபோதும் போட்டி கிடையாது. மேலும் அவருடன் போட்டி போடும் அளவிற்கு நான் கமலிற்கு நிகரானவனும் கிடையாது, இதுபோன்ற செய்திகளைப் படிக்கும் போது மிகுந்த வருத்தமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.