செய்திகள்

கமல் செய்த நன்றிக்கடன்

த்ரிஷ்யம் படத்தைத் தமிழில் எடுக்கும்போது தமிழகத்தின் ஏதாவதொரு வட்டாரவழக்கில் பேசலாம் என்று முடிவுசெய்த கமல் தேர்ந்தெடுத்தது திருநெல்வேலி வட்டாரவழக்கு. பாபநாசம் படம் முழுக்க கமல் திருநெல்வேலி வட்டாரவழக்கு மொழியில்தான் பேசியிருக்கிறாராம்.

கமல் நெல்லை வட்டாரவழக்கு மொழியைச் சரியாக உச்சரிக்கவேண்டும், அதில் எந்தத் தவறும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார். அதனால் படப்பிடிப்பின் போதே தமக்கு உதவியாக அந்த வட்டாரவழக்கை நன்கு தெரிந்த ஒருவர் உடனிருக்கவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்.

இதனால் அந்தப்படத்தில் கமலுக்கு வட்டாரவழக்கைச் சொல்லிக்கொடுத்தவர் சுகா. அந்தப்படம் முழுக்க அவருடனேயே இருந்தாராம் சுகா. அந்தப்படத்தில் அவருடைய உழைப்பு கமலுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அதன்விளைவு, இப்போது கமல் நடிக்கும் தூங்காவனம் படத்தின் வசனங்களை எழுதும் பொறுப்பை சுகாவிடம் கொடுத்திருக்கிறாராம் கமல். நன்றிக்கடன்?