செய்திகள்

கம்பனிகள் சட்டத்தில் திருத்தம்

கம்பனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கம்பனிகள் சட்டத்தில் காணப்படும் சிங்கள மற்றும் ஆங்கில வடிவங்களில் காணப்படும் முரண்பாடுகள் காரணமாகவே அந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இது தொடர்பாக  கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியூதீனினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது.
1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டமானது 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தினால் இரத்துச் செய்யப்பட்டது. இந்த சட்டம் கம்பனிகள், நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் ஆகியவற்றினை ஒன்றிணைத்தல், நிறுவனங்களைக் கூட்டிணைத்தல், கடல் கடந்த கம்பனிகளுக்கான ஏற்பாடுகள், முடிவுறுத்தல், நிர்வாகி ஆவணங்களைப் பதிவு செய்தல், வெளிநாட்டுக் கம்பனிகளைப் பதிவு செய்தல், கம்பனி சட்ட ஆலோசனை ஆணைக்குழு, கம்பனிகள் பிணக்குகள் சபை, நானாவிதமானவை போன்ற விடயங்களைக் கையாள்வதற்கான 534 பிரிவுகளையும் 13 அட்டவணைகளையும் உள்ளடக்கியுள்ளது.
எனினும் இந்த சட்டத்தின் சிங்கள மற்றும் ஆங்கில வடிவங்களுக்கிடையிலான முரண்பாடுகள் காணப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளது. எனவே குறித்த சட்டத்தில் திருத்தங்களை முன்வைப்பது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியூதீனினால்  முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
n10