செய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் வெளியிடங்களை சேர்ந்த 1500 பேர் நிர்க்கதி

அத்தியாவசிய காரணங்கள் தவிர்ந்த வேறு காரணங்களுக்காக கம்பஹா மாவட்டத்திற்குள் வெளியிலிருந்து வருதல் மற்றும் மாவட்டத்திற்குள்ளிருந்து வெளியே செல்வதனை இரண்டு வாரங்களுக்கு தடை செய்வதற்கு மாவட்டத்தின் கொரோனா தடுப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகள் வழங்கும் குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது
கம்பஹா மாவட்டத்தில் தற்போது 15,000 பேர் வரையிலானோர் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாது சிக்கியுள்ளதாகவும் இதன்போது தெரிய வந்துள்ளது.
எவ்வாறாயினும் கம்பஹா , ராகம , நீர்கொழும்பு வைத்தியசாலைகளில் கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் 51 பேர் வரையில் இருக்கும் நிலையில் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் இந்த மாவட்டத்தில் இருந்து யாரையும் வெளியில் அனுப்பாது இருக்கவும் இங்கு நிர்க்கதியாகியுள்ள வெளியிடங்களை சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. -(3)