செய்திகள்

கரப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஒலைத்தொடுவாய் அணி வெற்றி

மன்னார் மாவட்டத்தில் உள்ள கரப்பந்தாட்ட அணிகள் கலந்து கொண்ட கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியொன்று நேற்று மன்னார் தள்ளாடி இரானுவ விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

இதன் இறுதிப் போட்டியில் ஓலைத்தொடுவாய் அணியும்.புதுக்குடியிருப்பு அணியும் மோதியதில் ஒலைத்தொடுவாய் அணி வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

வெற்றி பெற்ற இந்த அணிகளுக்கான கிண்ணங்களை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன். மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான்.தள்ளாடி இரானுவ முகாமின் பொது மக்கள் தொடர்பு அதிகாரி தினேஷ் பெர்ணான்டோ உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த போட்டிகளை அல்-ஜின்னா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

IMG-20150205-WA0006