செய்திகள்

கராச்சி சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீச்சு: 17 தீவிரவாதிகள் சாவு

பாகிஸ்தானில் வடக்கு வஜரிஸ்தான் பகுதியில் விமானப்படை விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கராச்சி நகரில் கடந்த 13-ந் தேதி இஸ்லாமிய தீவிரவாதிகள்முஸ்லிம்கள் தங்கள் வழிபாட்டு தலத்துக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்து தாக்குதல் நடத்தியதில் 45 அப்பாவி சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற ஜூண்டுல்லா மற்றும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கங்கள் பொறுப்பேற்றுள்ளன.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரவாதிகள் வேட்டையை தீவிரப்படுத்திய பாகிஸ்தான் இன்று ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வடக்கு வசிரிஸ்தானின் வாரேக்கா மண்டி பகுதியில் விமான தாக்குதலை நடத்தியது. விமானப்படையின் போர் விமானங்கள் தீவிரவாதிகள் இலக்குகள் மீது மேற்கொண்ட தாக்குதலில் 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்தவர்களும் பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிரவாதிகளின் பதுங்குமிடங்கள் மற்றும் வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளன.