கருஞ்சக்திக் ( (Black Energy) கருதுகோள்களை உறுதிப்படுத்தும் ஆழ் கடல் இயற்பியல் பரிசோதனைகள்
மருத்துவர்.சி.யமுனாநந்தா
இன்று பிரபஞ்சம் பற்றிய ஆய்வுகளில் ஈர்ப்பு அலைகளின் கண்டுபிடிப்பு பல இயற்பியல் தகவல்களை பகிர்ந்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக பிரபஞ்சத்தின் உள்ள கரும் திணிசுகளையும் (Black Matters) கருஞ்சக்தியினையும் கண்டறியும் ஆய்வுகளில் இயற்பியல் அறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதில் கரும் திணிசுத்தாக்கத்தை கண்டறியும் ஆய்வுச் சோதனைகள் செனன் திரவத்தின் மூலம் செய்வதற்கு உபகரணம் உருவாக்கப்படுகின்றது. இதற்காக 3.5 தொன் திரவ செனன் நிலத்திற்கு கீழ் 1 மைல் ஆழத்தில் வைக்கப்பட்டு அதன் திணிவில் ஏற்படும் மாற்றங்கள் ஆராயப்படவுள்ளன.
உலகில் உள்ள மூலகங்களில் மிகவும் நிலையானது செனன் (Xenon 124) ஆகும். இதன் அரைவாழ்வுக் காலம் 1.8 ளுநஒவடைடழைn வருடங்கள் ஆகும். அதாவது தற்போதைய பிரபஞ்சத்தின் வாழ்வுக் காலத்தை விட 130 billion மடங்கு அதிகமாகும். செனன் மூலகத்திற்கு காலக் கணியம் சார்பளவில் பூச்சியமாக இருக்கும்.
பிரபஞ்சத்தில் உள்ள சடத்துவத்தைப் போல் ஐந்து மடங்களவில் கருந்திணிசுகள் உள்ளதாக இயற்பியலாளர்கள் கருதுகின்றனர்.
பொதுவாக கருந்திணிசுகள் பௌதிக உலகுடன் தாக்கமடைதலை அவதானிக்க முடிவதில்லை. ஏனெனில் கருஞ்சக்;திகள் ஒளியை வெளிவிடுவதில்லை. மின்காந்த அலைகளை உருவாக்குவதில்லை. ஆனால் இதனை உய்த்தறிய உலகில் முதன்மை ஆய்வாக நிலக் கீழ் ஆய்வுத்தளத்தில் சுமார் ஒரு மைல் ஆழத்தில் செனன் திரவத் திணிவில் ஏற்படும் மாற்றங்கள் ஆராயப்படுகின்றன. இப் பரிசோதனையில் ஏற்படும் அவதானிப்புக்கள் கருஞ்சக்தி தொடர்பான கருதுகோள்களை உறுதிப்படுத்த உதவும். இலங்கையின் கடற்பரப்பிற்கு தெற்கே உலகில் ஆழமான சாகர அடித் தளத்தில் மேற்கொள்ளக் கூடிய ஆய்வுகள் இயற்கையான சூழலில் கருஞ்சக்;தியின் தாக்கத்தினைக் கண்டறிய உதவும். இவை வேகமடையும் விஞ்ஞானத் தொழில்நுட்பத்தினை அடுத்த பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும். இலங்கையை அணுகும் சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் இத்தகைய முன்னோடிப் பரிசோதனை ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.
கருஞ் சக்தியினை உணரும் உபகரணங்கள் அமைக்கப்பட்டால் மூன்றாம் நிலை குவாண்டம் கணினிகள் உருவாக்கப்படலாம். இவை காலத்தினை வருடங்களில் பத்தின் மடக்கைகளாக கணிப்பிடும்.
உதாரணமாக மட10 இல் -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3 என்றவாறு காலக்கணியம் அமையும் இதனால் கடந்த காலம் 10,000 வருடங்களில் நிகழ்தலை அடுத்து 1000 வருடங்களில் நிகழப்போகும் நிகழ்வுகளையும் ஒளியலைகளுக்கு அப்பாலான சார்பு கணியத்தில் கண்டறியலாம். அதாவது காலப்பயணம் என்பது ஒளியலைகளிற்கு அப்பால் சாத்தியமாகும் சந்தர்ப்பம் கருஞ்சக்திக் கருதுகோள் உறுதிப்படுத்தப்படின் சாத்தியமாகும்.