செய்திகள்

கருணாநிதியின் மூத்த சகோதரி 99 வயதில் காலமானார்

திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த சகோதரி சண்முகசுந்தரம் அம்மையார் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 99.

திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த சகோதரியும், முரசொலி மாறன், முரசொலி செல்வம் ஆகியோரது தாயாருமான சண்முகசுந்தரம் அம்மையார், இன்று காலை 11 மணிக்கு கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் இயற்கை எய்தினார்.

அவரது உடல் கோபாலபுர இல்லத்திலேயே பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 10 மணிக்கு அவரது உடல், கோபாலபுரம் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட்நகர் மின் மயானத்தில் எரியூட்டப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று சகோதரி உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். மேலும், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.