செய்திகள்

கருணாவின் பாவனையிலிருந்த 2 வாகனங்கள் மீட்பு: 3 வாகனங்களை தேடி வேட்டை

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் (கருணா) பாவனையிலிருந்த ஐந்து வாகனங்களில் இரண்டு வாகனங்கள் கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றையடுத்தே கொள்ளுப்பிட்டி பொலிஸார் குறிப்பிட்ட வாகனத்தை மீட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் ஐந்து வாகனங்கள் கருணாவுக்கு வழங்கப்பட்டிருந்தன. இதில் மேலும் 3 வாகனங்கள் பற்றிய தகவல்கள் இதுவரையில் கிடைக்கவில்லை.