செய்திகள்

கருத்துக்கணிப்பு மோசடி: சமாஜ்வாடி கவலை

கருத்துக்கணிப்புகள் பணம் கொடுத்து வெளியிடப்படுபவை என உ.பி., மாநில அமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான ஆசாம் கான் தெரிவித்துள்ளார்.

உ.பி.,யில் தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற்றால் ஆளும் சமாஜவாதி கட்சிக்கு வெறும் 80 இடங்களில் மட்டுமே கிடைக்கும் என்றும், பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்றும், ஒரு கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஆசாம் கான் கூறியதாவது: உ.பி., சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டு உள்ள நிலையில், பகுஜன் சமாஜ் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்பு கூறுவது நகைப்புக்குரியது. கருத்து கணிப்பு நடத்துபவர்கள், பணத்தை வாங்கிக் கொண்டு, இந்த வேலையை செய்கின்றனர். நாங்கள் மக்களை நம்புகிறோம்; இவர்களை அல்ல. அடுத்து வரும் தேர்தலிலும் சமாஜ்வாடி கட்சியே வெற்றி பெற்று, மீண்டும் 5 ஆண்டுகளுக்கு எங்களது ஆட்சியே தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

N5