செய்திகள்

கருணா மற்றும் கே பி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்: சரத் பொன்சேகா

விடுதலைப்புலிகளின் முன்னாள் உருப்பினர்களான கருணா மற்றும் கே பி ஆகியோர் அவர்களது முன்னாள் பயங்கரவாத செயற்பாடுகளுக்ககாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று ஜனநாயக முன்னனி தலைவரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்த அவர், இந்தியாவுக்கெதிரான எந்தவொரு பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் இலங்கை மண்ணில் இடமளிக்கப்படாது என்றும் கூறினார்.