செய்திகள்

‘கருப்பன் குசும்புக்காரன்’ புகழ் நடிகர் தவசி காலமானார்

‘கருப்பன் குசும்புக்காரன்’ என்ற ஒற்றை வசன புகழ் நடிகர் தவசி காலமானார்.

புற்றுநோயால்பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தவசி, சிகிச்சை பலனின்றி காலமானார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், சூரிக்கு அப்பாவாக நடித்திருந்த தவசி அதில் கூறிய ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்ற ஒற்றை வசனத்தின் மூலம் பிரபலமடைந்திருந்தார்.

பாரதிராஜாவின் ‘கிழக்குச் சீமையிலே’ படத்திலிருந்து தனது சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார்.

கிடா மீசையில் பல படங்களில் நடித்து வந்த தவசி, அண்மைக் காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

மிகவும் மெலிந்த நிலையில் இருக்கும் அவரின் வீடியோ அண்மையில் வெளியாகிருந்ததுடன் அது ரசிகர்களுக்கு அதிச்சியை ஏற்படுத்திருந்தது. -(3)