கரையோர ரயில் போக்குவரத்தில் இன்றும் தாமதம் நிலவும்
கரையோர ரயில் மாரக்கத்தில் இன்றும் ரயில் போக்குவரத்தில் தாமதம் நிலவகூடும் என ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.
வௌ்ளவத்தை ரயில் பாலத்திற்கு அருகில் மேற்கொள்ளப்படும் திருத்த வேலைகளே இந்த தாமதத்திற்கு காரணம் என குறிப்பிடப்படுகின்றது.
கொழும்பு கோட்டை மற்றும் கல்கிக்கிஸ்ஸைக்கு இடையில் ஒரு வழிப் போக்குவரத்தாகவே ரயில் போக்குவரத்து இடம்பெறுவதாக ரயில்வே கட்டுப்பாட்டறை கூறியுள்ளது
குறித்த பாலத்தின் திருத்த வேலைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நடைபெறும் என ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.
n10