கர்ப்பிணிகளுக்கு வழங்கிய போசனை பொதியில் புழுக்கள் (படங்கள்)
அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசணை பொருட்கள் வழங்கும் நிகழ்வு 21.03.2015 அன்று நோர்வூட் வெஞ்சர் பகுதியில் இடம்பெற்றது.
ஒரு கர்ப்பிணி தாய்க்கு 20,000 ரூபாவிற்கு போசணை பொருட்கள் வழங்கும் நடவடிக்கையின் முதற்கட்ட நடவடிக்கையாக 2000 ரூபா பெறுமதியான போசணை பொருட்கள் வழங்கப்பட்டது.
இவ்வாறு வழங்கிய போசனை பொதியில் கொளப்பீ 1 கிலோ, பருப்பு 1 கிலோ, பயறு 1 கிலோ, கடலை 1 கிலோ, சோயா 500 கிராம், நெத்திலி 500 கிராம்,
செமன் டின் 2, சிவப்பு அரிசி 2 கிலோ ஆகியன அடங்கிய பொதியையே வழங்கியுள்ளனா்.
இந்த பொதியில் இருந்த கொளப்பீ, கடலை, நெத்திலி ஆகியவற்றில் புழுக்கள் இருந்ததாக பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகா் பி.எல்.கே வசந்த தெரிவிக்கின்றார்.
இவ்வாறு வழங்கிய பொதியை பார்க்கும்போது அதில் புழுக்கள் இருந்ததையடுத்து பொது சுகாதார பரிசோதகா்களுக்கு கர்ப்பிணி தாய்மார்கள் முறையிட்டுள்ளனா்.
இதனையடுத்து பொதிகள் வழங்கிய இடத்திற்கு விரைந்த சுகாதார பரிசோதகா்கள் அதனை சோதனை செய்யும் போது இவ்வாறு 130 பொதிகளில் புழுக்கள் இருந்ததை உறுத்திப்படுத்தியுள்ளனா்.
அதன்பின் பொது சுகாதார பரிசோதகா்கள் இவ்வாறு 130 பொதிகளில் இருந்த பழுதடைந்த பாவிக்க முடியாத நிலையில் இருந்த பொருட்களை மட்டும் கைப்பற்றிக்கொண்டு, ஏனைய பொருட்களை கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கியுள்ளனா்.
பழுதடைந்த பொருட்களை வழங்கியதை பற்றி பிரதமர் காரியாலயத்தின் உத்திரவின் படி நுவரெலியா மாவட்ட பிரதி செயலாளா் திருமதி.மல்லிகா அமரசேகர 22.03.2015 அன்று குறித்த தோட்டத்திற்கு விஜயம் செய்து பழுதடைந்த பொருட்களை வழங்கியதை பற்றி விசாரணை நடத்தினார். விசாரணையின் பின் கா்ப்பிணி தாய்மார்களுக்கு கொடுக்க முடியாத பொருட்களை 23.03.2015 அன்று வழங்குவதற்கு தீர்மானம் எடுத்துள்ளார்.
அதேபோல் இந்த அத்தியவசிய பொருட்களை வழங்கிய கினிகத்தேனை பகுதியில் உள்ள ஒரு தனியார் தொகை கடையை 22.03.2015 அன்று பொகவந்தலாவ சுகாதார பரிசோதகர்கள் சுற்றி வளைப்பினை மேற்கொண்டனா். இதன்போது அங்கு விற்பனைக்காக பாவிக்கமுடியாத நிலையில் இருந்த சில அத்தியவசிய பொருட்களை சுகாதார பரிசோதகா்கள் கைப்பற்றினா்.
அத்தோடு குறித்த கடை உரிமையாளருக்கும், இவ்வாறான பொருட்களை பெற்றுக்கொண்ட கினிகத்தேனை கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகத்திற்கும் எதிராக அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகா் பி.எல்.கே வசந்த தெரிவிக்கின்றார்.