செய்திகள்

கறுப்பின இளம்பிராயத்தினரை விரட்டி விரட்டி துன்புறுத்தும் அமெரிக்க பொலிசார் (வீடியோ)

அமெரிக்காவின் டெக்ஸ்சாஸ் மாநிலத்தின் வெள்ளையர்கள் அதிகம் வாழும் மக்கென்னி என்ற இடத்தில் அங்கு வசிக்கும் ஓருவர் நேற்றைய தினம் தனது அமெரிக்க- ஆபிரிக்க இளம் பருவத்தினரை நீர்த்தடாகம் அருகே ஒன்றுகூடி விளையாடி மகிழ்வதற்காக அழைத்ததால் அங்கு பெருமளவில் கறுப்பின இளம்பிராயத்தினர் குழுமியதை பொறுக்காத ஒருவர் பொலிசாருக்கு தொலைபேசி மூலம் முறையிட்டதை தொடர்ந்து அங்கு வந்த பொலிசார் அவர்களை விரட்டி துன்புறுத்தும் வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது.

அங்கு வந்த பொலிசார் அங்கு குழுமியிருந்த கறுப்பின இளம் பருவத்தினரை அச்சுறுத்தி நிலத்தோடு நிலமாக படுக்க வைத்ததுடன் கைது செய்யப்போவதாக அச்சுறுத்தினர். ஒரு யுவதி தனது உரிமைகள் பற்றி பொலிசாருடன் வாதாடியபோது அவரை ஒரு பொலிசார் பலவந்தமாக பிடித்து கீழே படுக்கவைத்து துன்புறுத்தியதுடன் அந்த யுவதிக்காக வாதாடிய இளைஞன் ஒருவனை தனது துப்பாக்கியை உருவி மிரட்டி கொலைசெய்து விடுவதாக மிரட்டினார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=Gl92emFF3Ww” width=”500″ height=”300″]