செய்திகள்

கறையான் புற்றுக்களுடன் பாழடைந்து போயுள்ள விபூஷிகாவின் வீடு ( வீடியோ )

தர்மபுரம் பகுதியில் பயங்கரவாதத்திற்கு புத்துயிர் ஊட்ட முயற்சித்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரியின் வீடு தற்போது பாழடைந்த நிலையில் காட்சியளிக்கின்றது.

வீட்டின் உள்ளேயும் வெளியேயும் கறையான் புற்றெடுத்துள்ளதுடன், பாவனையற்ற நிலையில் காணப்படுகின்றது. ஜெயக்குமாரியின் கைதை தொடர்ந்து அந்த வீட்டில் யாரும் தங்காமையால், வீடு முழுவதும் பராமரிப்பற்ற நிலையில் காணப்படுகின்றது.

சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டிருந்த ஜெயக்குமாரி ஒரு வருடத்துக்கு பின்னர் கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அயலவர்களினால் ஜெயக்குமாரிக்கும், அவரது மகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் உறவினர் வீடுகளில் தங்கி வருகின்றார்.

இந்நிலையில் தனது மகளை தன்னுடன் தொடர்ந்து வைத்திருப்பது மகளுக்கு பாதுகாப்பு இல்லையென்றும், இதனால் அவரை மீண்டும் சிறுவர் இல்லத்திலேயே விடும்படியும் கண்டாவளை சிறுவர் நன்னடத்தை அதிகாரியிடம் ஜெயக்குமாரி கோரியிருந்தார். அந்தவகையில், விபூசிகாவை மீண்டும் மகாதேவா சிறுவர் இல்லத்தில் தங்கவைத்து கல்வி கற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி தற்போது விபூசிகா ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா ஆச்சிரம சிறுவர் இல்லத்தில் தங்கி கல்வி கற்று வருகின்ற நிலையில், தாயார் தொடர்ந்தும் உறவினர் வீடுகளில் தங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=kFiVTgfSM1k&feature=youtu.be” width=”500″ height=”300″]

vipooshi1