செய்திகள்

கலப்புத் தேர்தல் முறைமைக்கு சு.க இணக்கம்

19ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் 20ம் திருத்தச் சட்டமாகவாவது தேர்தல் முறைமை மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என சுதந்திரக் கட்சி கோரி வரும் நிலையில் பழைய மற்றும் புதிய முறையுடன் இணைந்த கலப்புத் தேர்தல் முறைமைக்கு தமது கட்சி இணங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார்.

இதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்வதோடு மாவட்ட ரீதியிலான விருப்பு வாக்குகள் அடிப்படையில் 60 பேரும், தேசியப்பட்டியலில் 25 பேரும், 160 தொகுதிகளிலிருந்து தொகுதிவாரியாக 165 பேரும் பாராளுமன்றுக்குத் தெரிவாவார்கள்.

பல்வேறு ஆலோசனைகளைகள் முன்வைக்கப்பட்ட போதும் இதுவே நடைமுறைக்குச் சாத்தியமானது என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.