Search
Thursday 19 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் 36வது நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு

தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் 36வது நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு

தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் 36வது நினைவு தினம் வவுனியாவில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா வரியிறுப்பாளர் சங்கம் மற்றும் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் உள்ள அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி நினைவுகூரப்பட்டதுடன் அடிகளாரின் தமிழ் சேவை தொடர்பில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள் கருத்துரையையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திடீர் மரணவிசாரணை அதிகாரியுமான சிவநாதன் கிசோர், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகர பிதா சந்திரகுலசிங்கம், வரியிறுப்பாளர் சங்கத் தலைவரும் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவருமான செ.சந்திரகுமார், சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க தலைவர் சேனாதிராசா, வவுனியா சைவப்பிரகாசா வித்தியாலயத்தின் உயர்தர மாணவிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, அனித்தா கொமிக்கேசனால் இச்சிலைக்கு வர்ணம் பூசி அலங்கரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

IMG_1157

IMG_1120 IMG_1123 IMG_1127

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *