Search
Sunday 29 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பெண்­ணான நான் தைரியமாக என் ­ மீது திணிக்­கப்­படும் சவால்­களை உடைத்தெறி­கிறேன்-பறை இசைக் கலைஞர் ந. விஜ­ய­லட்­சுமி

பெண்­ணான நான் தைரியமாக என் ­ மீது திணிக்­கப்­படும் சவால்­களை  உடைத்தெறி­கிறேன்-பறை இசைக் கலைஞர் ந. விஜ­ய­லட்­சுமி

“நான் பறை இசைக்­க­ரு­வியை வாசிக்க இறங்­கி­யதும் என்னைச் சுற்றி என் உற­வுகள் தடை­வே­லியை நிர்­மா­ணித்­தனர். அத் ­த­டை­வே­லியை துணிந்து தகர்த்­தெறிந்தேன்.இவ்­ வே­லியை தகர்த்­தெ­றிந்தும் என்னை நோக்கி என் உற­வுகள் பல இடை­யூ­று­களை விளை­வித்­தனர். அவர்கள் விதைத்­த­ வி­தைகள் எனக்குள் முளைக்கவில்லை. அதற்கு காரணம் நான் பெரும் ஈர நிலமண்.
நான் பெரும் கருங்­கல்­பாறை. இப் பாறையின் மீது பெரும் ஆட்­சே­பனை என்னும் வெடி­ம­ருந்தை வைத்து தகர்க்கப் பார்த்­தனர். அதிலும் என் உற­வுக்­கூட்­டத்­தினர் தோல்­வியைத் தழு­வினர்.
இவ்­வாறே என் உடம்பு முழு­வதும் இரத்தம் வடிய மனக்­கா­யங்­களை ஏற்­ப­டுத்­தினர். என் முழு உடம்பும் அவ­மா­னங்கள், இன்­னல்கள், அவர்­களின் நக்கல் வார்த்­தை­களால் வலி எடுக்­க­வில்லை. இதற்­கான காரணம் இவ்­வா­றான சமூக காயங்­களின் வலியை ஏற்றுக் கொள்ளும் ஏரி­யாவை என் உடம்பு கொண்­டி­ருக்­க­வில்லை என்­கிறார் 21 வய­தான விஜ­ய­லட்­சுமி.
“முதன்முத­லாக என் தோட்பட்டையில் பறை தொங்­கு­வதை என் பெற்­றோர்கள் கண்டு பயந்து முகம் சுழித்­தனர். ஏதோ டைம் வெடி­குண்டை இடுப்பில் கட்டிக்கொண்ட தற்­கொலைக் குண்­டு­தா­ரி­யாக என்னைப் பார்த்­தனர்.
என் அம்மா ஒப்­பாரி வைத்தே கத்தி அழு­து­விட்டார். எங்கள் பிர­தே­சத்தின் அக்கம் பக்­கத்து உற­வு­களும் அம்­மா வின் ஒப்­பாரி சத்தம் கேட்டு வீட்­டுக்குள் கூடி விட்­டனர். கூட்­டமாய் கூடிய சனங்கள் என்னை வாய்க்கு வந்த வகையில் நெருப்பாய் திட்டத் தொடங்­கினர்.
முதன்முத­லாக என் கைகள் பறையை தொட்­டதும் எனக்குள் ஏதோ ஒரு­வித உணர்வு புலப்பட்டது. அதை வார்த் தை­களால் விபரிக்­கவிய­லாது.அது ஓ உணர்வின், உடல் எழுச்­சியின் அடை­யா­ள­மாகும் என்­கிறார் சென்னை மேட்டுக் குப்­பத்தைச் சேர்ந்த தமிழ்­நாடு புத்தர் கலைக் குழுவின் பிர­தான பறை இசைக் கலைஞர் ந. விஜ­ய­லட்­சுமி.Feature-1

நான் பெரும் கருங்­கல்­பாறை. இப் பாறையின் மீது பெரும் ஆட்­சே­பனை என்னும் வெடி­ம­ருந்தை வைத்து தகர்க்கப் பார்த்­தனர். அதிலும் என் உற­வுக்­கூட்­டத்­தினர் தோல்­வியைத் தழு­வினர்.
இவ்­வாறே என் உடம்பு முழு­வதும் இரத்தம் வடிய மனக்­கா­யங்­களை ஏற்­ப­டுத்­தினர். என் முழு உடம்பும் அவ­மா­னங்கள், இன்­னல்கள், அவர்­களின் நக்கல் வார்த்­தை­களால் வலி எடுக்­க­வில்லை. இதற்­கான காரணம் இவ்­வா­றான சமூக காயங்­களின் வலியை ஏற்றுக் கொள்ளும் ஏரி­யாவை என் உடம்பு கொண்­டி­ருக்­க­வில்லை என்­கிறார் 21 வய­தான விஜ­ய­லட்­சுமி.
“முதன்முத­லாக என் தோட்பட்டையில் பறை தொங்­கு­வதை என் பெற்­றோர்கள் கண்டு பயந்து முகம் சுழித்­தனர். ஏதோ டைம் வெடி­குண்டை இடுப்பில் கட்டிக்கொண்ட தற்­கொலைக் குண்­டு­தா­ரி­யாக என்னைப் பார்த்­தனர்.
உண்­மையில் பறை சாதிக் கரு­வி­யல்ல. புரா­தன காலத்து தமிழர் முதன் முத­லாக கண்­டு­பி­டித்த தகவல் சாத­னமே பறை­யாகும்.பறை என்­பது சொல் (அறி­வித்தல்) என்றே பொருள்­படும். இது பல­ருக்கு தெரி­யாத விட­ய­மாகும். எப்­படி பறையை இழி­வாக கரு­தலாம். செம் மொழியாம் தமிழ் பேசும் தமிழ் இனத்தின் பெரும் சொத்தே பறை­யாகும்.
என் பூட்டன் கண்­டு­பி­டித்த பறையை என் கைகளால் வாசிப்­பது என்ன தவறு? இன்னும் எமது சமூகம் மூட நம்­பிக்­கையில் தான் வாழ்­கி­றது” என சமூ­கத்தின் மீது குற்ற விரலை நீட்­டு­கிறார் விஜ­ய­லட்­சுமி எவ்­வித அச்­சமும் இல்­லாது.
“பெண்­ணான நான் தைரியம் மூல­மாக என்­ மீது திணிக்­கப்­படும் சவால்­களை தைரி­யத்­துடன் உடைத்தெறி­கிறேன். இவ்­வு­ல­கத்தில் எப்­போ­துமே வேத­னைக்கு உள்­ளா­கி­ற­வர்கள் பெண்­கள்தான். அறி­வுள்ள பெண்கள் வெடித்து சிதறும் வானத்தைப் போன்­ற­வர்கள்.
இப்­போது என்னை பலரும் சபாஷ் கெட்டிக் காரி என சொல்லிப் பாராட்­டு­வார்கள். அப்­ பா­ராட்­டுக்கு மத்­தியில் பெரும் சவால்­களும் வரு­கின்­றன. இந்த சவால்­களைக் கண்டு துவண்டு போய் வீட்டின் ஒரு மூலைக்குள் உட்­கார்ந்து தனி­மைப்­படும் கோழைப் பெண்­ணல்ல நான். சவால் விடு­கிறார். விஜ­ய­லட்­சுமி பயத்தை தொலைத்து.
நான் பி.கொம் வரை கல்வி கற்­றுள்ளேன். வலைப்­பந்­தாட்ட வீராங்­கனை. இப்­போது வலை­பந்­தாட்டப் பயிற்­று­நராக உள்ளேன்.வலைப்­பந்­தாட்­டத்தல் ஈடு­பாடு கொண்­டுள்­ளதை அங்­கீ­க­ரிக்கும் என் உற­வுகள் பறை வாசிப்­பதில் முரண்­ப­டு­வதை எவ்­வாறு சொல்­வது என்­பது எனக்குத் தெரி­யாதுள்­ளது என விஜ­ய­லட்­சமி உஷ்­ண­மாக தெரி­விக்­கிறார்.
புத்தர் கலைக் குழுவின் தலை­வரும் பிர­பல பறை இசைக் கலை­ஞ­ரு­மான ஆ.மணி­மாறன் (இவர் கும்கி திரைப்­பட சொய்ங்…. சொய்ங்….. பாடல் புகழ் பாடகி மகி­ழி­னியின் கணவர்) தலை­மையில் 2015 இல் மூன்று நாட்கள் வேடந்­தாங்­கலில் இடம்­பெற்ற பறை இசை பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றேன்.
அன்­றைய தினம் முதல் நான் சந்­திக்கும் மனி­தர்­களை விட சந்­தித்த எதிர் அலைகள் தான் அதிகம் என்பேன்.பறை தமிழ் இனத்தின் விடு­த­லைக்­கான மொழி என்­பது என் பெற்றோர் உள்­ளிட்ட பல­ருக்குத் தெரி­யா­துள்­ளது. எனது பெற்றோர் ஒரு சாதி சமூகக் கட்­டுப்­பாட்­டுக்குள் வாழும் குடும்பம்.
அச் ­ச­மூகக் கட்­டுப்­பாடே என்னை பறையை தொட­வேண்டாம் என குரல் எழுப்பு­கி­றது. இங்கு சாதியம் பேசு­கி­றது.உலகின் அனைத்து இசைக்­ க­ரு­வி­க­ளி­னதும் தாயே பறை. பறையிலிருந்து சிந்தும் ஒலி அனை­வ­ரையும் மெய் சிலிர்க்க வைக்கும். இந்த சக்தி எந்­த­வொரு இசைக்­க­ரு­விக்கும் இல்லை. உடலிலுள்ள அனைத்து நரம்­பு­களும் பறையின் ஒலிக்கு அடி­மை­யாகி விடும்.
இந்தக் கரு­வியை தமிழ் இனம் சாதிக்­க­ரு­வி­யாக்­கி­விட்­டதே என்­ப­துதான் எனக்குள் வாழும் பெரும் கவ­லை­யாகும்.சேர, சோழ, பாண்­டிய, நாயக்க மன்­னர்­களின் பிர­தான ஊட­கமே பறை­யாகும். இம் மன்­னர்கள் மக்­க­ளுக்கு சொல் லும் செய்­தியை பறை வாசித்து மக்­க­ளுக்கு மன்­னரின் செய்­தியை வழங்­கிய ஊட­கத்­து­றை­யி­னரே பறை­க் கலை­ஞர்­க­ளாவர்.இதன் கார­ண­மா­கவே மன்­னர்­களின் ஆட்சிக் காலத்தில் மன்­னர்­களின் மாளி­கைக்குள் இவர்கள் வசித்­தனர்.
இதை சங்க காலத்து இலக்­கியம் தொட்டு பௌத்த காப்­பி­யங்­க­ளான மணி­மே­கலை, குண்­ட­ல­கேசி, சீவக சிந்­தா­மணி உள்­ளிட்ட பல நூல்­களில் பறை பற்­றிய சிறப்­புகள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன என தக­வல்­களை கக்­கு­கிறார் விஜ­ய­லட்­சுமி.
அன்று எம்­ மக்கள் மத்­தியில் பெரியார், எம்.ஆர்.ராதா போன்­ற­வர்கள் பகுத்­த­றிவை விதைத்­தனர். இவர்­களின் பெரும் கருத்­துகள் மக்கள் மத்­தியில் பர­வின. இன்று இவர்­களைப் போன்ற பகுத்­த­றிவு சிந்­த­னை­யா­ளர்கள் மக்கள் மத்­தியில் தோன்ற வேண்டும். மூட நம்­பிக்­கைகள் ஒழிய வேண்டும்.இன்று சாதியம் தமிழ் மக்கள் மத்­தியல் பல­மாக வேர் ஊன்றி விட்­டது. அத்­ தாக்­கத்தின் விளை­வாக பறையை தொடு­வ­தற்கும் பலரும் பயப்­ப­டு­கின்­றனர், கூச்­சப்­ப­டு­கின்­றனர்.
ஆடுகள் மத்­தி­யில்­கூட மனி­தர்கள் சாதியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளனர். வெள்­ளாடு, இரு குட்டி ஈனும், செம்­மறி ஆடு, ஒரு குட்டி ஈனும் என சாதியால் ஆட்­டையும் பிரித்­துள்­ளனர்.இயற்­கையே கடவுள் என்ற நம்­பிக்­கையில் வாழ்­பவள். சாதி, மதம், கடவுள் என பிரித்துப் பார்த்தால் எலி­ஸபெத் மகா­ரா­ணி­யாலும் கூட அடுத்­தவர் தய­வின்றி அரை­வி­நாடி வாழ இய­லாது.இதை உணர்ந்­துதான் நான் வாழ்­கிறேன். இது எனது சொந்தக் கருத்­தாகும். மூட நம்­பிக்­கைக்குள் வாழ்­பவள் அல்ல நான்.
எனக்கு நியாயம் எனத் தெரி­வதை கூச்­சப்­ப­டாமல், சாஸ்­திரம், சம்­பி­ர­தாயம் பாராமல் வெளியே துணி­வுடன் தெரி­விக்­கிறேன். அநி­யா­யத்­திற்கு பயந்து ஒளி­வ­து­மில்லை.ஆதிக்க வெறி­யர்கள் எங்­களைப் போன்ற பறை கலை­ஞர்­களை ஒதுக்கி வைப்­பதன் மூல­மாக எழும் மனக்­கா­யங்­களின் வலி எங்­க­ளுக்கு மட்­டுமே தெரியும். இந்த ஆதிக்க வெறி­யர்­களின் அடக்கு முறைக்கு நான் அடி­மை­யாக முடி­யாது.
ஆதிக்க வெறி­யர்­களின் அடக்­கு­முறை உக்­கி­ரத்தால் எனக்குள் கொழுந்து விட்டு எரிந்து கொண்­டி­ருக்கும் பறை வாசிப்பு ஆர்­வத்தை கொல்ல முடி­யாது. என்­றுமே பறை என் கைக­ளுக்குள் கபடி ஆடும். பறை என் உயிர்.பறையை வாசிக்கும்போது எனது உடலில் உள்ள ஒவ்­வொரு நரம்பும் எழும்­பித்­துள்ளும். சுண்டுக் கம்­பாலும், அடிக் ­கம்­பாலும் பறையை வாசிக்­கும்­போது அதிரும் உணர்வை பறையைத் தொடும்­போதே உண­ர­முடியும். வானத்­தையே அதட்டும் சக்­தியைக் கொண்­டது பறை ஒலி.
இந்த பெரும் சக்­தியைக் கொண்ட பறையை அண்­மையில் எனது அப்பா திடீ­ரென எடுத்து வாசித்தார். அன்று என் வாழ்­நாளில் பெரிய மகிழ்ச்­சி­யான திருப்­பு­முனை நாளாகும்.பல மாதங்­க­ளாக பறை வாசிப்­பினால் வைராக்­கி­ய­மாக என்­னோடு பேசாதிருந்த என் அப்பா அன்று தான் என்­னோடு பேசினார். இது பறையின் வலி­மை­யாகும்.
விஜய், நியூஸ் 7, புதி­ய­த­லை­முறை, கலைஞர் தொலைக்­காட்சி நிகழ்­வு­களில் என் பறை முழுக்க நிகழ்ச்­சிகள் இடம்­பெற்­றுள்­ளது.அண்­மையில் விஜய் தொலைக்­காட்­சியின் நீயா நானா நிகழ்ச்­சியில் எமது புத்தர் கலைக்­குழு கலந்து பல­ரையும் அதி­ர­வைத்­தது. நானும் கலந்து கொண்டேன்.
இந் ­நி­கழ்ச்­சியைப் பார்த்து பலரும் பாராட்­டு­வார்­க­ள். பாராட்­டு­ப­வர்­களில் சிலர் நான் இருக்கும் இடத்தை விட்டு நகர்ந்­ததும் ஏள­ன­மாக என்னை விமர்­சனம் செய்­வார்கள். இதுதான் உலகம். கொட்­டு­கிறார் வார்த்­தை­களை பஞ்­சு­மிட்டாய் போன்று விஜ­ய­லட்­சுமி.
எனது அத்தை மகனை பெற்றோர் எனக்குத் திரு­மணம் செய்து வைக்க முடிவு செய்­தனர். நானும் அவரும் அத்தை மகன், மாமன் மகள் என்ற இரத்த உற­வுக்கு அப்பால் சின்­னஞ்­சிறு வயது முதல் நல்ல நண்­பர்­க­ளா­கவே பழகி வந்தோம்.இவ்­வ­ளவு இருந்தும் திரு­மண பேச்சின் அடித்­தளப் பேச்சின்போது பறை இசைக்­க­ருவி தடைக்­கல்­லாக விழுந்து விட்­டது.
பறை வாசிப்பை நிறுத்த வேண்டும் என நிபந்­தனை விதித்­தனர் என் அத்தை வீட்டார். என்னால் இந்த நிபந்­த­னை க்குத் தலை சாய்க்க இய­லாது போனது. திரு­மண பேச்சும் முறிந்­தது.எனது பறை­வா­சிப்­புக்கு எவர் அங்­கீ­காரம் வழங்­கு­கின்­றாரோ அவ­ருக்கே நான் மனை­வி­யாக வாழ்வேன். இது எனது சத்­தி­ய­மான செய்தி. மனித இனத்தின் சாதி ஆதிக்க வெறிக்கு எனது பறையை பலிக்­க­டா­வாக்க நான் தயார் இல்லை.
உலகில் முதன்­மை­யான மற்றும் மிகச்­சி­றந்த சமூ­க ­சீர்த்­தி­ருத்­த­வாதி கௌதம புத்தர். அவ­ரோ­டுதான் இவ் உலகின் சமூக சீர்த்­தி­ருத்த வர­லாறு ஆரம்­ப­மா­கி­றது.சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பர­வட்டும் என்றார் அம்­பேத்கர். அதனால் தான் நானும் புத்­தரின் பெயரில் இயங்கும் புத்தர் கலைக்­கு­ழுவில் இணைந்தேன்.
யுகம் யுக­மாக பறை வாசிப்­ப­வர்­களை காலில் மிதித்து நசுக்­கப்­பட்ட தாழ்த்­தப்­பட்ட சமூகம் என தெரி­வித்து வஞ்­சிக்­கப்­ப­டு­கையில் வளர்ந்து வரும் என்­னைப்­போன்ற பறை கலை­ஞர்­களின் சுய­ம­ரி­யா­தையை இழக்க நாம் தயா­ராக இல்லை.எங்­களின் சுய­ம­ரி­யா­தையைப் பாது­காத்­துக்­கொள்ள போராட வேண்­டி­யுள்­ளது. ஆதி­ கா­லத்தில் பறை ஒலித்தால் பொங்­கி­வரும் காற்றை அடைத்தோம் போர்ப்­பறை காதில் விழுந்ததும் வீரர் கூட்டம் அணி திரண்டது.
எதிரிகளை மிரட்டி விரட்டியது. உழவர் பறை ஒலித்தது. உழவர் சமூகம் உழைக்க பூமி செழித்தது. காடு, கழனி யெங்கும் உழைக்கும் உழைப்பாளிகளின் வர்க்கம் சோர்ந்து போகாமலிருக்க அன்று இந்தப்பறை மொழிதான் உற்சாகம் வழங்கியது.விதைக்க, அறுவடை செய்ய, போர் வெற்றியை அறிவிக்க, பிறப்பு, இறப்பு, வெற்றி, தோல்வி மற்றும் கூத்து களுக்கு இறை வழிபாடு என அனைத்துக்குமே பறையை பயன்படுத்தினோம்.
அன்று எந் தெந்த மூலைகளில் தமிழன் வாழ்ந்தானோ அங்கெல்லாம் பறை ஒலித்தது. மீண்டும் அந்தப் பறை உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் மத்தியில் ஒலிக்க வேண்டும் என்பதே எனது கனவு.இதற்காக தியாகத்துடன் கடுமையாக உழைப்பேன் என்கிறார் பறை இசைக் கலைஞரான வீர மங்கை விஜயலட்சுமி.(15)Feature-2


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *