Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வவுனியா மாவட்ட கலை இலக்கிய கருத்தமர்வும் பண்பாட்டு பெருவிழாவும்

வவுனியா மாவட்ட கலை இலக்கிய கருத்தமர்வும் பண்பாட்டு பெருவிழாவும்

வவுனியா மாவட்ட கலாசார பேரவை, வவுனியா மாவட்ட செயலகம், வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்துள்ள வவுனியா மாவட்ட கலை இலக்கிய கருத்தமர்வும் பண்பாட்டு பெருவிழாவும் இன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார் தலைமையில் கலாபூசணம் மணிக்கபதுகே குணதிலக அரங்கில் ஆரம்பமான நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக வட மாகாண பிரதி பிரதம செயலாளர் அ. சிவபாதசுந்திரம் கலந்துகொண்டனர்.

இதன்போது பாடசாலை மாணவர்களின் பலவேறு கலாசார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் வாழ்நாள் பேராசிரியர் எஸ் சிவலிங்கராஜாவின் மருவி வரும் தமிழ்ப்பண்பாடு எனும் கருத்துரையும் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை, நாளை இரண்டாம் நாள் நிகழ்வுகள் கலாபூசணம் திருமதி தேவி மனோகரி நாகேஸ்வரன் அரங்கில் மாலை 2.15 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந் நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் எம். பி. ஆர். புஸ்பகுமார தலைமையில் இடம்பெறவுள்ளதுடன் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர்களான ந. சிவசக்தி ஆனந்தன் மற்றும் கே. கே. மஸ்தான் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதுடன் சிறப்பு விருந்தினராக வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் கலந்துகொள்ளவுள்ளார்.

IMG_0807 IMG_0783 IMG_0786

IMG_0777 IMG_0758 IMG_0763 IMG_0770

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *