செய்திகள்

600 ஆண்டுகள் பழமை வாய்ந்த முல்லை கெருடமடுவில் சிறப்பாக நடைபெற்ற ஆடி அமாவாசை

ஆடி அமாவசைத் தீர்த்தம் வெகுசிறப்பாக முல்லைத்தீவு கெருடமடு பிள்ளையார் கோவிலில் செவ்வாய்கிழமை சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

ஓட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வர் ஆலயத்திலிருந்து சிவபெருமான் வீதீ வழியாக கெருடமடுவைச் சென்றதும், ஆலய பிரதமக்குருக்கள் கீர்த்திஸ்ரீவாசன்குருக்கள், கெருடமடுபூசகர் சி.சிவஞ்ஞானம் ஆகியோரால் விசேட பூஜைகள் நடத்தப்பட்டது.

தந்தையை இழந்த பிள்ளைகள் தங்கள் தந்தையின் ஆத்மாசாந்தியடைவதற்கு விதரமிருந்து கிரியைகள் செய்யப்பட்டு நீரில் கரைத்து தீர்தமாடுவது இந்துக்களின் ஒருமுக்கியமானவிரதமாகும். அந்தவகையில் 600 ஆண்டுகளுக்கு பழமைவாய்ந்ததும், கெருடன் என்ற பறவையினால் சிவபெருமானின் அருளால் கீரிமலைக்குச் செல்லும் முதியவர்களால் நடக்கமுடியாத நிலை ஏற்பட்டபோது இவ்விடத்தில் இப்பறவை வந்து தன்னுடைய சொண்டால் கீறி நீரைஎடுத்து அடியார்களினை தீர்த்தமாட வைத்ததனால் கெருடன் மடு என்ற காரணப் பெயரும் இவ் இடத்திற்கு உண்டு.

அந்தவகையில் பல்வேறுபட்ட மாவட்டங்களிலிருந்து தங்கள் நேர்த்திக் கிரியைகளை செய்வதற்கு பெருந்திரளான மக்கள் வருகை தந்துதீர்த்தமாடுவது வழக்கம். இந்தஆண்டும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு கிரியைகள் செய்து தீர்த்தமாடியமை குறிப்பிடத்தக்கது.

ke1 ke2 ke3 ke5 ke6

N5