செய்திகள்

“கல்யாணி தங்க நுழைவு”என பெயரிடப்பட்டுள்ள அதிநவீன நவீன களனி பாலம் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது

கொழும்பின் புறநகர், பேலியகொடவில் “கோல்டன் கேட் கல்யாணி” என பெயரிடப்பட்டுள்ள அதிநவீன நவீன களனி பாலம் இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திறந்து வைக்கப்பட்டது.கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், ஆறு வழிப்பாதைகளைக் கொண்ட உயர் தொழில்நுட்பக் கேபிள்களுடன் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதல் பாலமாக இது அமைகிறது.

இலங்கையின் முதலாவது அதி நவீன தொழிநுட்பத்தின் கூடி கேபிள்களின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய களனி பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் நேற்று புதன்கிழமை குறித்த பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த பாலத்திற்கு “கல்யாணி தங்க நுழைவு” என பெயர் சூட்டப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.(15)