செய்திகள்

கல்லடியில் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் .

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மேதின நிகழ்வுகள் இன்று காலை கல்லடியில் சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை 9.00மணியளவில் கல்லடி மணிக்கூண்டு கோபுரத்திற்கு முன்பாகவிருந்து மாபெரும் மேதின பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்,கட்சி முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

துடைகளை தாண்டி விடைகளை காண்போம் என்னும் தலைப்பில் நடைபெற்ற இந்த மேதின ஊர்வலம் கல்லடி,உப்போடை துளசி மண்டபம் வரை நடைபெற்றது.

ஆங்கு மேதின நிகழ்வுகள் நடைபெற்றன.பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் இந்த மேதின நிகழ்வுகள் நடைபெற்றன.

IMG_4783 IMG_4786 IMG_4792 IMG_4803 IMG_4808 IMG_4834 IMG_4840