கல்லடி ஸ்ரீசித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்
மட்டக்களப்பு,கல்லடி அருள்மிகு ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகத்தினை முன்னிட்டு அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை முதல் நடைபெற்றுவருகின்றது.
நாளை ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00மணி வரையில் இந்த எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக ஆலய பரிபாலனசபையினர் தெரிவித்தனர்.
300 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் மஹா கும்பாபிசேக கிரியைகள் வியாழக்கிழமை ஆரம்பமானது.
ஆலயத்தின் புனராவர்த்தன,ஜீனோர்த்தன,அஸ்டபந்தன,நவகுண்டபக்ஸ, இராஜகோபுர மஹா கும்பாபிசேக பெருவிழா திங்கட்கிழமை வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
வவுனியா குருமண்காடு ஸ்ரீவிநாயகர் ஆலய பிரதம குரு ஆகம கிரியா பாவலர்,சிவாச்சாரிய திலகம்,ஆகம கிரியாமணி சிவஸ்ரீ நாராயணசண்முகநாதக்குருக்களினால் கும்பாபிசேக பூஜைகள் நடத்தப்பட்டுவருகின்றன.
திங்கட்கிழமை காலை 6.50தொடக்கம் 7.25மணி வரையுள்ள சுபவேளையிவல் மஹா கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது.
இதேநேரம் இன்று காலை முதல் நடைபெற்றுவரும் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வில் நாடெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.