செய்திகள்

கல்லுண்டாயில் கழிவுகளை கொட்டுவதற்கு வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சு வரையறை!

யாழ்ப்பாணம், காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் கழிவுகளைக் கொட்டுவதற்கு வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சு சில வரையறைகளை விதித்துள்ளது. யாழ். மாநகர சபையினால் குறித்த இடத்தில் கொட்டப்பட்டுவரும் கழிவுகளால் தமக்கு அசௌகரியங்கள் ஏற்படுகின்றன என்று தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில் வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்ற புதன்கிழமை முற்பகல் வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்படது.

இதன்படி, கல்லுண்டாய் பகுதியில் இன்றிலிருந்து மருத்துவ மனைக் கழிவுகளை கொட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மாநகர சபை ஆணையாளரும் சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் – மலக்கழிவுகள் எதிர்வரும் ஒரு வாரம் மாத்திரம் குறித்த பகுதியில் கொட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் – அதன் பின்னர் மாநகர சபை அதற்கான இடத்தை தேர்வு செய்து கொள்ளவேண்டும் எனவும், அத்துடன் இராணுவத்தினர் குறித்த இடத்தில் மலக்கழிவுகளைக் கொட்டுவதை நிறுத்துவதுடன், இதுகுறித்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட தரப்பு ஊடாக அவர்களுக்கு அறிவிப்பதென்றும், மலக்கழிவு மற்றும் வைத்தியசாலைக் கழிவு அல்லாத கழிவுப் பொருள்கள் எதிர்வரும் 6 மாத காலங்களுக்கு கல்லுண்டாயில் கொட்டுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.