செய்திகள்

கல்வியங்காடு பொதுச்சந்தை தொகுதி கட்டுமானப் பணிகளை உலக வங்கியின் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்

உலக வங்கியின் நிதியுதவியில் கட்டப்படும் கல்வியங்காடு பொதுச்சந்தை தொகுதி கட்டுமானப் பணிகளை உலக வங்கியின் அதிகாரிகள் நேற்று புதன்கிழமை பார்வையிட்டனர்.

இதன்போது வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சந்தை தொகுதிக்கு சென்ற உலக வங்கியின் அதிகாரிகள் கட்டுமான பணிகளை பார்வையிட்டதுடன் மேற்கொண்டு செய்ய உள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.(15)