செய்திகள்

கல்வி பிரச்சினைகளுக்கு தீர்வை வலியுறுத்தி அனைத்து பல்கலை மாணவர்கள் பேரணி

கல்வித் துறையில் நிலவும் பிரச்சினைகளக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகிலிருந்து தற்போது அலரி மாளிகை நோக்கி ஆர்ப்பாட்ட பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்பாட்ட பேரணி நடத்தப்படுவதுடன் இதில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துக் கொண்டுள்ளர். இந்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக ஹைலெவல் வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.