செய்திகள்

கல் சூடாக இருக்கும் போதே ரொட்டியை தட்டிக்கொள்ளுங்கள் : 20வது திருத்தம் தொடர்பாக சோபித்த தேரர்

19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள இவ்வெளையிலேயே தேர்தல் திருத்தமான 20வது திருத்தத்தையும் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் எனவும் இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால் அது நடக்காது போய் விடுமென சமூக நீதிக்கான  மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளர் மாதுலுபாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர்  இதனை தெரிவித்துள்ளார்.
19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள இவ்வெளையிலேயே தேர்தல் திருத்தமான 20வது திருத்தத்தையும் நிறைவேற்றுவது கட்டாயமானது.  தற்போதைய ஜனாதிபதியின் ஊடாகவே அதனை நிறைவேற்ற முடியும். வேறு ஒருவர் மூலமாக அதனை நிறைவேற்ற முடியும் என நினைப்பது முட்டாள்தனமானது. கல்லு சூடாக இருக்கும் போதே ரொட்டியை தட்டிக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்