செய்திகள்

களுதாவளை குளத்தில் ஆணின் சடலம் மீட்பு (படங்கள்)

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் உள்ள நீர்நிலை பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

களுதாவளை நாகதம்பிரான் ஆலயத்திற்கு அருகில் உள்ள நீர்நிலைப்பகுதியிலேயே இந்த சடலம் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலம் கடந்த 10 நாட்கள் கடந்ததாகவுள்ளதாகவும் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையெனவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதுவரையாரும் காணவில்லையென்ற முறைப்பாடும் இப்பகுதியில் பதிவு செய்யப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தினை நீதிவானின் அனுமதி கிடைத்ததும் அப்பகுதியில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கையெடுக்கப்படும் என களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

P1540529

P1540537

P1540539