செய்திகள்

கள்ளசாராய நிலையமொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் (படங்கள்)

அக்குரஸ்ஸ பரதுவ வெலதகொடஹேன பிரதேசத்தில் வியாபாரி ஒருவரின் வீட்டுக்கு பின்புறத்தில் சட்டவிரோதமாக நடாத்தப்பட்டு வந்த கள்ளசாராய நிலையமொன்றை அகுரஸ்ஸ பொலிஸார் 30.05.2015 அன்று முற்றுகையிட்டுள்ளனர்.

வீட்டுத்தோட்டத்தின் பூமிக்குள் இரகசியமான முறையில் கள்ளசாராயம் காய்ப்பதற்கு பதுக்கி வைத்திருந்த 4,05,000 மில்லிலீற்றர் வெள்ளம் பீப்பாக்களும் கல்லசாராயம் காய்ப்பதற்கு பயன்படுத்திய உபகரணங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தின் போது சந்தேகநபரொருவர் அக்குரஸ்ஸ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Kasippu (1)

Kasippu (2)

Kasippu (3)

Kasippu (4)