செய்திகள்

கழிவுத் தேயிலை தூள் விசாரணைகள் ஆரம்பம்!

கழிவுத் தேயிலை தூள் அடங்கிய 11 கொள்கலன்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

ஒருகொடவத்தை சுங்க களஞ்சியத்தில் தரித்து வைக்கப்பட்டுள்ள 11 கொள்கலன்களில் கழிவுத் தேயிலை தூள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க நிவாரண பிரிவு சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவென 9 கொள்கலன்களில் வைக்கப்பட்டிருந்த 162 மெட்ரிக் டொன் கழிவுத் தேயிலை தூள் நேற்றையதினம் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை இடம்பெறுவதாக அவர் கூறினார். இவ்வாறு 300 கொள்கலன்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பிலான விசேட விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார்.