செய்திகள்

கழுத்தை அறுத்துக் கொண்ட இலங்கை தமிழ் அகதி

தமிழகத்தின் சேலம் – புது பஸ் ஸ்டாண்டில், கழுத்தை அறுத்துக் கொண்ட, திருவண்ணாமலை, இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை, இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சசிகுமார், (31). இவர், கோவையில் பெயின்டராக வேலை செய்து வருகிறார். விடுமுறை நாளில், திருவண்ணாமலை முகாமுக்கு சென்று, குடும்பத்தினரை பார்த்து வருவது வழக்கம்.

நேற்று கோவையில் இருந்து, சேலம் பஸ்சில் வந்த அவர், புது பஸ் ஸ்டாண்டில், போத்தல் ஒன்றை உடைத்து, கழுத்தை அறுத்துக் கொண்டார் என, தமிழக ஊடகமான தினமலர் செய்தி வௌியிட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி பொலிசார், சசிகுமாரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பள்ளப்பட்டி பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

n10