செய்திகள்

கழு கங்கையில் மூழ்கி தாயும் இரு மகள்களும் பலி

களுத்துறை பல்பிட்டியகொடவில் கழு கங்கையில் நீராடிய 42 வயதுடைய தாயும் அவரது 11 மற்றும் 16 வயதுடைய இரு பெண் பிள்ளைகளும் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.

இன்று பிற்பகல் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த இவர்கள் நீரில் மூழ்கியபோது அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.