செய்திகள்

கவன ஈர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் சிவில் சமூகம் வேண்டுகோள்

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தின் சர்வதேச விசாரணை அறிக்கையினை வெளிடக்கோரியும் இலங்கை அரசாங்கத்தின் உள்ளகப் பொறிமுறையை நிராகரித்தும் எதிர்வரும் 24ம் திகதி யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர்சங்கம் நடத்தவுள்ள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது .
சர்வதேச விசாரணையாளர்கள் இலங்கைக்குள் வந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் சாட்சிகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும். எனவும் பாதிக்கப்பட்ட சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் எனக்கோரியும், ஐ.நா சர்வதேச பொறிமுறை ஊடாகவே தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என வலியுறுத்தியும் கையெழுத்துப் போராட்டத்தை நடத்தப்போவதாகவும் கூறியுள்ளனர்.

நல்லூரில் அமைந்துள்ள அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையத்தின் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இந்த அமையத்தின் இணைப்பேச்சாளர் எழில் ராஜன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் கருத்து தெரிவிக்கையில்,

சர்வதேச விசாரணைக்கு ஆதரவு கோரியும் உள்ளக பொறிமுறையை நிராகரித்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் 24 பெப்ரவரி 2015 அன்று யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்துள்ள பேரணிக்கு தமிழ் சிவில் சமூகம அமையம் தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.

இப் பேரணியில் நீதி நிலைநாட்டப்படுவதில் அக்கறையுள்ள சகல தரப்பினரையும் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு நாங்கள் எங்கள் சார்பிலும் அழைப்பு விடுகின்றோம். ஜெனீவா அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமைக்கு வன்மையான கண்டனத்தையும் செப்டெம்பருக்கு முதல் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் நேரடியாக

எமது மக்களின் சட்சியங்களை பதிவு செய்யக் கோரியும் எமது மக்களின் விருப்பை வெளிப்படுத்தும் வெகுசனப் பிரசாரத்தையும் தமிழ் சிவில் சமூகம் விரைவில் முன்னெடுக்கும். 10 பெப்ரவரி 2015 அன்று நிறைவேற்றப்பட்ட வடக்கு மாகாண சபையின் இனப்படுகொலை தீர்மானத்தை தமிழ் சிவில் சமூகம் முழு மனதோடு வரவேற்கின்றது.

உள்ளக பொறிமுறையில் தமக்கு நம்ப்பிக்கையில்லை எனபதையும் நடந்தது நடந்து கொண்டிருப்பது இனப்படுகொலைதான் என்ற தமிழ் மக்களின் நீண்டகால விளங்கிக்கொள்ளலையும் சர்வதேச விசாரணையொன்று இனப்படுகொலை குற்றத்தையும் சேர்த்தே விசாரிக்க வேண்டுமென்பதையும்
அத்தகைய ஒரு விசாரணை முறையாக நடைபெற இவ்விடயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தமிழ் சிவில் சமூகம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றது இன்று இந்த நிலைப்பாட்டை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றமான வட மாகாண சபையும் எடுத்துள்ளமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும்.என தெரிவித்தார்.