கவரவில தோட்ட ஏ பிரிவு லயன் குடியிருப்பில் தீ : .இரண்டு அறைகள் எரிந்து நாசம் (படங்கள்)
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா கவரவில தோட்ட ஏ பிரிவு லயன் குடியிருப்பில் இன்று விடியற்காலை 01.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஒரு வீட்டில் இரண்டு அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
எனினும் இரண்டு அறைகளிலும் இருந்த பொருட்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டாவாறு வெளியே ஓடி வந்துள்ளனர்.
கூச்சல் சத்தம் கேட்டு அயலவர்கள் அனைவரும் விரைந்து வந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறித்த வீட்டிலிருந்த 8 பேர் தற்போது பாதுகாப்பாக உறவினர்களின் வீட்டில் தங்க வைக்கப்பட்டள்ளனர்.
இத் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்து குறித்து மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.