செய்திகள்

கவுதமியை வீட்டில் வைத்து பூட்டி விட்டேனே : கமல்

நடிகர் கமல் ஹாஸன், கவுதமி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘பாபநாசம்’. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக்தான் இந்த பாபநாசம்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கமல், கவுதமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் கமல் பேசுகையில், “பாபநாசம் படத்தில் எனக்கு ஜோடியாக கவுதமி நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப்பிறகு கவுதமி நடித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இவரது நடிப்பைப் பார்த்து மிகவும் அசந்து போனேன். அம்மா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஒரு நல்ல நடிகையை வீட்டில் பூட்டி வைத்து விட்டேனே என்று வருத்தமாக இருந்தது,” என்றார்.