செய்திகள்

கஹவத்தையில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று

கஹவத்தை கொட்டகெதெனிய பகுதியில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று கொழும்பு மேல் நீதி மன்றத்தில் வழங்கப்படவுள்ளது.
2012ம் ஆண்டு ஜூலை மாத காலப்பகுதயில் குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன் இதில் 63வயதுடைய தாயும் 23வயதுடைய மகளும் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பாக மூன்று பேருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பே இன்று வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.