செய்திகள்

கஹவத்தை, கொட்டஹேதெனிய கிராமங்களில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

கஹவத்தை கொட்டஹேதெனிய பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற பெண்ணின் கொலைக்கும் இதற்கு முன்னர் இடம்பெற்ற கொலை சம்பங்களுக்குமிடையே தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் பிரதேசமெங்கும் பாதுகாப்புகளை பலப்படுத்தியுள்ளனர்.

இதன்படி பொலிஸாரும் , விசேட அதிரடிப்படையினரும் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த கொலை சம்பவம் தொடர்பாக இது வரை 50ற்கும் மேற்பட்டவர்களிடம் விசாரனைகளை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த கொலையை செய்தவரே இதற்கு முன்னர் இடம்பெற்ற கொலைகளை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில் விரைவில் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவரை கைது செய்வொம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.