செய்திகள்

கஹவத்தை கொலை சந்தேகநபர்களின் விடுதலையை எதிர்த்து சட்டமா அதிபரினால் மேன் முறையீட்டு மனு

கஹவத்தை  கொட்டகெத்தன பகுதியில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாயும்  மகளும் கொலை செய்யப்பட்ட  வழக்கின்  சந்தேகநபர்களை விடுதலை செய்து மேல் நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் மேன்முறையீடு செய்துள்ளார்.
சட்டமா அதிபர் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவினூடாக மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீள் பரிசீலனை செய்யுமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளார்.
வழக்கின் தீர்ப்பில் திருப்தி இல்லை என்பதால் சந்தேகநபர்களுக்கான விடுதலையை இரத்து செய்து தண்டனை அளிக்குமாறு மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது. குறித்த கொலை வழக்கின் சந்தேக நபர்கள் சந்தேகநபர்கள் கடந்த 28ம் திகதி மேல் நீதிமன்றால் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.