செய்திகள்

காக்கா முட்டை படத்துக்கு குவியும் சர்வதேச விருதுகள்

காக்கா முட்டை படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்து வருகிறது.

தனுஷ், வெற்றி மாறன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கியிருக்கும் படம் காக்கா முட்டை. இரண்டு சிறுவர்களை மையப்படுத்திய உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு விருதுகளை வாங்கி குவித்து வருகின்றன.

கடந்த 2014-ம் ஆண்டு டொராண்டோ சர்வேதச திரைப்பட விழாவில் திரையிட காக்கா முட்டை திரைப்படம் தேர்வானது. தொடர்ந்து இப்படம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 62வது தேசிய விருத்துக்கான பட்டியலில் இரண்டு தேசிய விருதுகளை வென்று மேலும் பெருமை சேர்த்தது. இந்நிலையில், காக்கா முட்டை படம் தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் 3 விருதுகளை வாங்கி குவித்துள்ளன.

சிறந்த திரைப்படத்திற்கான விருது, பார்வையாளர்களின் தேர்வு, சிறந்த நடிகர்களுக்கான கிராண்ட் ஜூரி விருது என மூன்று விருதுகளையும் காக்கா முட்டை படம் வென்றுள்ளன. இது படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய திரைப்பட விழாவில், ‘காக்கா முட்டை’ படம் விருதுகள் வென்றிருப்பது மிகுந்த பெருமையாக இருப்பதாக தனுஷ் டுவிட்டரில் கூறியுள்ளார். காக்கா முட்டையின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை ஃபாக்ஸ் ஸ்டார் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.