செய்திகள்

காங்கேசன்துறையிலிருந்து யாழ் தேவியை மகிந்த ஆரம்பித்துவைக்கவில்லை: மாற்றப்பட்ட திட்டம்

காங்கேசன்துறையிலிருந்து யாழ். நகர் வரையான யாழ்.தேவி சேவையினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ ஆரம்பித்து வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும் திடீரென திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவே யாழ். தேவியை ஆரம்பித்துவைத்தார்.

மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத உயர்பாதுகாப்பு வலயம் மற்றும் அங்கு இடித்தழிக்கப்பட்ட குடியிருப்புக்கள் என்பவை உள்ள நிலையில் காங்கேசன் துறையிலிருந்து ரயில் சேவையை ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்காது என்பதாலேயே இறுதி வேளையில் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.

யாழ். டில்க்கா ஹொட்டலில் காலை இடம்பெறும் தொழில்முயற்சி பற்றிய கூட்டமொன்றில் கலந்து கொள்ளும் மகிந்த தொடர்நது துரையப்பா விளையாட்டரங்கில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவார். இதற்காக பெருமளவு பொதுமக்கள் அரச போக்குவரத்துச் சபை பஸ்களில் கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளார்கள்.