காசல்ரீ நீர்தேக்கத்தில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீரை கொண்டுச் செல்லும் பிரதான இரு ஆறுகளான, கெசல்கமுவ மற்றும் டிக்கோயாவில் பிரதேச வாசிகள் குப்பைகளை கொட்டுவதால் சூழல் மாசடைந்து வருவதாக கடந்த தினங்களில் ஊடகங்களில் செய்தி வெளியானது.
அதனையடுத்து இன்று காசல்ரீ நீர்தேக்கத்தில் இருந்த குப்பைகளை இலங்கை மின்சார சபை அதிகாரிகள், நோர்வூட் பொலிஸார், காசல்ரீ நீர்தேகத்தில் மீன் பிடி தொழில் ஈடுப்படுபவா்கள், பொது மக்கள் ஆகியோர் இணைந்து குப்பைகளை அகற்றினா்.
காசல்ரீ நீர்தேக்கம் ஆரம்பிக்கப்பட்டு 67 வருடங்களுக்கு பின் இன்று குப்பைகளை அகற்றியது இதுவே முதல்தடவையாகும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
குறித்த இரண்டு ஆறுகளையும் மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்,
இந்நிலையில் குப்பைகளை கொட்டுவதால் ஆற்றின் நீரை பயன்படுத்த முடியாத நிலை தோன்றியிருந்தமை குறிப்பிடதக்கது.