செய்திகள்

காட்டுமன்னார் கோவிலில் போட்டியிடும் தொல். திருமாவளவன் வேட்பு மனு தாக்கல்

காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதற்காக காட்டுமன்னார்கோவிலில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் திருமாவளவன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதனை தேர்தல் அலுவலர் முத்துகுமார சுவாமி பெற்றுக்கொண்டார். இந்த தொகுதியில் அதிமுக சார்பில் முருகுமாறன், காங்கிரஸ் சார்பில் மணிரத்தினம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

N5