காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக 04 குழுக்களை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
இதற்கு பொது அமைதி மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளரின் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ குணதாஸ குறிப்பிட்டார்.
விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர், காணாமற்போனமை தொடர்பில் முறைப்பாடுகள் பதிவான பகுதிகளுக்கு அந்தக் குழுக்களை அனுப்பி விசாரணைகளை துரிதப்படுத்தவுள்ளதாக அவர் கூறினார்.
இந்த விசாரணைக் குழுக்களுக்கு சிறந்த அனுபவமுள்ள, மும்மொழிகளும் நன்கறிந்த பெண்கள் உள்ளிட்ட 1000 உத்தியோகத்தர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக எச்.டபிள்யூ குணதாஸ தெரிவித்தார்.