செய்திகள்

காணாமல்போனோரின் பிரச்சனை சந்திரிகாவின் முன்னால்

இலங்கையில் யுத்த காலத்தில் கடத்தப்பட்டும் கைதுசெய்யப்பட்டும் காணாமல்போகச் செய்யப்பட்டவர்களின் விவகாரத்தை தான் பொறுப்பேற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தம்மிடம் தெரிவித்ததாக அவரை அண்மையில் சந்தித்த காணாமல்போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

காணாமல்போனவர்களின் உறவினர்கள் கடந்த பல ஆண்டுகளாக தங்களின் உறவினர்களைத் தேடி பல வழிகளிலும் போராடி வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுடனான சந்திப்பில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான அந்தோணி ரவீத தெரிவித்தார்.