செய்திகள்

காணாமல்போனோரை தேடிக் கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுவாமிநாதன்

வடக்கில் தமது பிள்­ளைகள் கடத்­தப்­பட்­ட­தாக முறை­யிடும் தாய்­மாரின் முறைப்­பாட்­டுக்கு செவி­கொ­டுத்து அப்­பிள்­ளை­களை தேடிக்­கண்­டு­பி­டிப்­ப­தற்கு பொலிஸார் முயற்­சி­களை முன்­னெ­டுக்க வேண்டும் என நேற்று சபையில் வலி­யு­றுத்­திய, அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் சிவில் மற்றும் குற்­ற­வியல் வழக்­கு­களை விரை­வாக விசா­ரித்து முடிப்­ப­தற்கு நீதித்­து­றையில் பொறி­மு­றை­யொன்றை உரு­வாக்­க­வேண்­டு­மென்றும் அமைச்சர் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்­று­ வியாழக்கிழமை இடம்­பெற்ற குற்­ற­வியல் நட­வ­டிக்கை முறை சட்டக் கோவை (விஷேட ஏற்­பா­டுகள்) சட்­டத்தின் கீழ் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட வரை 48 மணித்­தி­யா­லங்கள் தடுத்து வைக்கும் சட்­ட­மூல விவா­தத்தை ஆரம்­பித்து உரை­யாற்றும் போதே மீள்­கு­டி­யேற்ற மற்றும் இந்து சமய விவ­கார அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் இவ்­வாறு தெரி­வித்தார்.அமைச்சர் சபையில் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வர்­களின் உரி­மை­களை பாது­காப்­ப­தற்கு இச்­சட்­ட­மூலம் 2 வரு­டங்­க­ளுக்கு நீடிப்­பதை ஆத­ரிக்­கிறோம்.இதனால் பொலி­ஸாரின் முறைப்­பா­டு­க­ளையும் ஆராய்­வ­தற்கு சந்­தர்ப்பம் கிடைக்­கின்­றது.

வடக்கில் பெண்கள் தமது பிள்­ளைகள் கடத்­தப்­பட்­ட­தாக நீதி­மன்­று­களில் முறை­யிடு­கின்­றனர்,வழக்கு தொடர்­கின்­றனர். எனவே, இது தொடர்பில் பொலிஸார் ஆராய வேண்டும்.எமது நாட்டு நீதி­மன்­றங்­களில் சிவில் மற்றும் குற்­ற­வியல் வழக்­குகள் பல வரு­டங்­க­ளாக தேங்கிக் கிடக்­கின்­றன.

சில வழக்­குகள் 25-–30 வரு­டங்­க­ளுக்கு மேலாக விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. சட்­டத்­த­ர­ணிகள் சில வழக்­கு­களில் கால அவ­காசம் கோரு­வ­தாலும் நாட்கள் செல்­கின்­றன. ஒரு­சில வழக்­கு­களை விசா­ரிப்­ப­தற்கு உண்­மை­யி­லேய காலம் தேவைப்­ப­டு­கின்­றன.

ஆனால், பெரும்­பா­லான வழக்­குகள் தேங்கி கிடக்­கின்­றன.இந்­தியா சிங்­கப்­பூ­ரிலும் இதே நிலைமை தான் காணப்­ப­டு­கி­றது. எனவே இதனை தீர்ப்­ப­தற்கு நீதித்­து­றையில் பொறி­மு­றை­யொன்றை ஏற்­ப­டுத்த வேண்டும். இன்று நாட்டில் கடத்தல்கள் கொலைகள் அதிகரித்துள்ளன.போதைபொருள் பாவனை பாடசாலைகளுக்குள்ளும் புகுந்துவிட்டது. அப்பாவனையும் அதிகரித்துள்ளது. இதனை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.இதற்கு இச்சட்டம் அவசியமாகும் என்றார்.